தலைகீழ் பிம்பங்கள்---அஹமது அலி----

நூலகம்
கொளுத்தி விடு....
அறிவுக்கு விலை கொடு.!
--))
வேரினை
வீழ்த்தி விடு...
கனிக்கு காத்திரு.!
--))
சுடரை
அணைத்து விடு....
வெளிச்சம் தேடு!
--))
தாயை
ஒதுக்கி வை
பாசம் பிச்சையெடு.!
--))
பணம்
பதுக்கி குவி...
பந்தத்திற்கு ஏங்கு..!
--))
சுயநலம்
சுகித்து இரு....
சுற்றமில்லையென அழு.!
--))
உழைப்பை
மறந்து விடு...
உயர்வுக்கு கனவு காண்.!
--))
ஆயுதமேந்தி
வன்முறை தொடு....
நன்முறை தேடு.!
--))
காந்தியை
கொன்று விடு...
அகிம்சை ஓது.!
--))
மதுக்கடை
பெருக்கி விடு....
குற்றங்கள் குறைய திட்டமிடு.!
--))
வாக்குகளை
அள்ளி வீசு....
வாக்குகளை பொறுக்கு..!
--))
வகுப்பு புகுமுன்
வகுப்பை குறி...
வகுப்புவாதம் கூடாதென போதி.!
--))
நீதிதேவதை
கண்களை கட்டிவிடு..
நிரபராதியை பலி கொடு.!
--))
மக்களை
அழித்து விடு....
நல்லாட்சிக்கு உறுதி கூறு.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (16-Feb-14, 10:36 am)
பார்வை : 236

மேலே