ஓய்வெடு என் இதயத்தில் - மணியன்

எனக்குப் பிடித்த
காதலியுடன்
ஓர் இனிய பயணம். . . .
=============
இதோ இன்னொரு நிலவு
எடுத்துவை
கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம். . .
=============
அதோ அந்த பறவை
பிடித்துவை
சிறகுகள் விரித்துப் பறக்கலாம். . . .
==============
வாடா மலர் வாசனை
பறித்துவிடு
பாதையில் தெளித்துச் செல்வோம். . . .
=============
நல்ல கவிதை தெரிகிறது
மடித்துவை
நேரம் போக உதவும். . . . .
=============
ஏழு நிறங்களில் வானவில்
சுருட்டிவை
உன் கண்களில் அணியலாம். . . .
=============
புல்களில் பனித் துளி
அள்ளியெடு
உன்முகம் துடைக்க உதவும். . . .
=============
எத்தனை விண்மீன் பாருங்கள்
பகர்ந்துவிடு
உன் கூந்தல் முடிக்கலாம் . . . .
===========
துள்ளி யோடும் மான்
சொல்லிக்கொடு
உன் கண்களின் விளையாட்டு. . . .
================
அன்பே எனக்கு இனி
வலிக்குது கால்கள்
இதோ என் இதயம் ஓய்வெடு. . . . . .

* * * * * * * *

===== நன்றியுடன் மணியன் =====

எழுதியவர் : மல்லி மணியன் (17-Feb-14, 12:41 am)
பார்வை : 633

மேலே