கிராமத்து சின்ன கிளி

அடியே சின்னபுள்ள
இம்முட்டு ஆசையா
எம்மேல ஆத்தங்கரை
போகயில அயித்தமாக
எனை நீயும் அக்கறையா
ஓர்பார்வ பாக்காம
நீ போனதில்லை உன்வீட்டு
சாரலத்தில் கம்பிக்கு நடுவேயுன்
சாந்தமான முகம்புதைத்து
சாடையாதான் நீ பாக்குறது
பாக்காம நா இருந்ததில்ல பள்ளி
பருவமுதல் பருவம் வரும்
நாள்வரையும்பக்கமேதானிருந்து
பாடங்கள படித்திருந்தோம்
நீ குத்தவச்ச காரணத்தால்
குறும்புக்காரி உனைகான
பித்துக்கொண்டு நாதிரிய
கொள்ளிவாய் பேயொன்னு
கொள்ளபக்க வந்து எனை
கொண்டுபோகபோகுதுண்டு
கோடங்கி வந்தேதான்
கொளையடித்து பார்த்தாண்டி
பாதகத்தி உன்னால்தான் நான்
பைத்தியமானேனென்று
பார்ப்பவர் யாருக்குந்தா
தெரியாம போனதென்ன வயசு
உனக்கில்ல வல்லமையும்
எனக்கில்ல வருமானயில்லாம
வாழ்கதா ஒண்ணுமில்ல
பொறுமயா நீயிருடி பொன்னோடு
பொருள்சேர வருவே உன்மாமே
வக்கனையா பெண்கேட்டு
வாடாமகாத்திருடி இனி வாழ்க்க
மொத்த உன்கூட அடியே
சிரிக்கிபுள்ள இம்முட்டு
ஆசையா எம்மேல
ஆத்தங்கரை போகயில
அயித்தமாக எனையுந்தான்
அக்கறையா ஓர்பார்வ
பாக்காம நீ போனதில்லை ,,,,,,

காத்திருக்கும் தேவதைக்காய் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (17-Feb-14, 12:20 am)
பார்வை : 407

மேலே