இன்றைய காதல்
தபோவன குடில்
தத்தி தாவும் குரங்கோசை
அவள் பக்கத்தில் நான்
என் விழி ஓரத்தில் அவள் பார்வை
நகைக்கும் புண்-நகை
நகம் கடிக்கும் அவள் விரல் ஓசை
விரல்கள் நடனமாடும் நல்லின பேச்சு
குரல்களை கொள்ளை கொண்ட குழந்தைதனம்
சினுங்கல் இட்ட அவள் முத்தம்
மொத்தமாய் என்னை அவளோடு புதைத்து வைத்த சில நொடி ரணம்
இவைகளை தாண்டி அவளது மெல்லிய மன ஓசை என் மன நிழலோட்டத்தில் பதித்து வைத்து அவள் சொன்ன மௌன மொழி எனக்கு மட்டும் தன் சொந்தம்
ரத்தம் சொட்டிய கண்ணீர் துளிகளின் காயங்களுக்கு அவள் முத்தம் மருந்திட்டது
சுகம் தேடிய சொற்களெல்லாம் அவள் விட்டுப்போன வருகிறேன் என்ற சொல்லில் தேக்கி நிற்கின்றது
இளமை வாட்டும் இந்த பருவத்தை அவள் இனிய அன்பு ஒன்று மட்டும் ஒன்றும் செய்யாமல் நிற்கின்றது
மீண்டும் தொடக்கத்தில் வந்து நிற்கின்றது அவளோடு அந்தியில் விட்டு வந்த இன்றைய காதல்!