ஆதவா நீ சாதுவாய் மாறுவாயா
இருளை விலக்கும் ஆதவனே!
இதயத்தில் இருக்கும் ஆண்டவனே!!
நிலவுக்கும் ஒளி தந்து -என்
நிழலுக்கும் மரம் தந்தாய்!
பருவ மாற்றமெல்லாம் உன் பார்வையினாலே!
பனியும்,மழையும் உன் கருணை!
தென்றலும்,அனல்காற்றும் உன் தாய்மை குணம்!
அவ்வப்போது உன் அனல் பார்வையை உருட்டி
நீரின் அருமை பெருமையை எனக்குணர்த்துவாய்!
மார்கழியில் உயிர்கலெல்லாம் உன் பார்வைக்காக
தவங்கிடக்கும்...
ஓர் உயிர் ஜனித்திடவும்! மறித்திடவும்!
உன் கருணை இன்றி நடந்திடுமா?
பஞ்ச பூத தலைவனப்பா!
தஞ்சம் அடைந்தால் பஞ்சமே இல்லையப்பா!!
கண்ணில் தெரியும் கடவுள் நீயே!
கருணை கொண்டால் செழிக்கும் புவியே!