தேசியக் காற்றே 13B2

காற்றே......... (13)

தேசம் முழுதும் சுழன்று வீசும்
சுதந்தந்திரக்காற்றே.....!
எம்மவர் சுவாசம்
சுமந்து திரிவது நீ தானே?

வேதவர் யார்?
முகம்மதியர் யார்?
இந்துத்துவர் யார்?
வேற்றுமை அதில் உணர்வாயோ?

பேதம் கொண்டு மாற்றம் பெற்று
நீயும் சுவாசம் உட் கலந்தாயோ?

அனைத்துயிர்க்கும் மூச்சுக்காற்றாய்
நீயே உள்ளாய்......
அவர் உயிர்முடிச்சாய்
உடற் சட்டகத்தில் நீயே உள்ளாய்

உடன் பிறவியாய் நேசிக்கிறேன்
உள்ளார்ந்த அன்பாலே யாசிக்கிறேன்....
பொங்கனலாய் கனன்றிடும் அவருள்ளம் புகுந்து
துவேசத்தை நீக்கிடு தேசியக்காற்றே......!

- கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : - அமுதா அம்மு (17-Feb-14, 8:08 pm)
பார்வை : 86

மேலே