வேற்றுமை
உலக சமுத்திரத்தில்..
ஆணாதிக்க அலை அதிகமென்று...
மனம் புழுங்கி மடல் வரைந்தது..
மங்கையர் மணல்க் கூட்டம்..
""கடலோரக் காவல் படைக்கு""...
(இந்தக் கவிதையின் உண்மை பிண்ணனி)
இடம் : 26.01.2014 இந்தியக்குடியரசு தினத்தன்று சென்னை மெரினா கடற்கரையில் நான் கண்ட காட்சி
"""உயர் நிலை பள்ளிக் கூட்டம் ஒன்று
உள்ளம் மகிழ கூடிய வேலையில்
உடன் வந்த ஆசிரியரோ
அலைகளுடன் உறவாட..
ஆடவரை மட்டும் அனுமதிக்க..
கலங்கி நின்ற கன்னியரின்
கவலை நிலை எண்ணிய போது..
எனக்குள் தோன்றிய வரிகளே அவை"""