தமிழன் நான் இன்று
இன்று
யாரும் இல்லா இரவினிலே - நான்
சாலையில் ஓடும் பேரூந்து
நீரே இல்லாப் பாலையிலே - நான்
நித்தமும் தோன்றும் முழுநிலவு
ஆளே இல்லாத் தீவினிலே - நான்
ஆட்சி செய்யும் ஒரு அரசன்
காலே இல்லா நிலையினிலும் - நான்
ஓட நினைக்கும் ஒரு முடவன்
ஆனால்
நீரின் மேலே கிடந்தாலும் - நான்
உருகி டாத பனிப்பாறை
நெருப்பில் நிதமும் வெந்தாலும் - நான்
கறுத்திடாத வெண்சங்கு
உள்ளுக்குள்ளே இருந்தாலும் - நான்
அணைந்திடாத மெழுகுதிரி
கல்லுக்குள்ளே வாழ்ந்தாலும் - நான்
உயிரோடிருக்கும் சிறு தவளை