ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கு பாமாலை 80 சொற்களில்

சென்னிமலையின் விடிவெள்ளியே
அன்னைவள்ளியின் தவப்புதல்வரே
நடராசனார் நல்வழிகாட்ட
நற்றமிழில்நடைபோட்ட செகதீசரே ....!!

ஈன்றதால் பெற்றது
ஈரோடு பெரும்பேறு ...!
ஈந்தாய் எமக்கு
ஈடில்லா முத்தமிழ்சாறு ...!!

வணக்கம்வள்ளுவ வழங்கிய
வாழும் வள்ளுவமே ....!
வாசிக்கும் போதினிலே
சன்னலோர சாரலாய்
சிலிர்ப்புகள் தோன்றிடுமே ...!!

தமிழமுதாம் கவியமுதம்
பருகத்தரும் தமிழன்பரே ....!
ஜப்பானிய ஹைக்கூவை
தமிழில்தாலாட்டிய தாயன்பரே ....!!

குடைராட்டினம் சுற்றினாற்போல்
குதூகலம் பிறப்பெடுக்க
குறும்பாவிலும் குறும்புசெய்யும்
குழந்தையுள்ளம் கொண்டவரே ....!!

உன்எழுத்தில் இடம்பிடிக்க
வார்த்தைகளும் வரம்கே‌ட்கும் !
நின்கவியில் தனைமறந்து
நதியும் நடைமறக்கும்
ஓடையும் திசைமாறும் ....!!

கவியரங்க ஆசனமும்
ஆசானுன் மொழிகேட்க
ஆவலுடன் காத்திருக்கும் ...!!

கனாக்காணும் வினாக்கள்மூலம்
கேள்விகளால் வேள்விநடத்தினாய் !
நெஞ்சின் நிழலில்
நீக்கமற நிறைந்தாய் ...!!

கவிஞானமே ! கலைக்கூடமே !
சூரியப்பிறைபோல் விடியல்விழுதுகளாய்
புவியுள்ளவரை நின்புகழ்பரவும் ....!!

பத்தேழுதந்த பன்முகவித்தகரே !
எண்பதில்உமை வணங்குகின்றோம் !
நல்லாசி வேண்டுகின்றோம் ...!!
நூறாண்டுகாண வாழ்த்துகின்றோம் ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Feb-14, 11:08 am)
பார்வை : 191

மேலே