தனிமை தவிப்பு

விட்டு விட்டு போகமாட்டேன் நீ சொன்ன சத்தியம்.
தொட்டு விட்டு யோயிட்டியே உன் நினைவு என்னை சுத்தியும்,
இருக்கின்றேன் பல நாளாய் பத்தியம்,
இறந்த உன்னை தேடுது என் புத்தியும்,
தரைமீனாய் தவிக்கிறேன் உன்னால..
எனை விட்டு ஏன் போனாய் வின்னால..
ஒத்தையில எனை விட்டு நீ போனாய்,
மெத்தையில தூக்கம் இன்றி நான் வீணாய்,,,
வெத்து முகத்தோட வெளியே நான் போனா ,
குத்தும் முள்ளாக வார்த்தையை வீசுராங்க.
கோபத்தை உள்ளே பூட்டினேன்.
மெளனத்தால் தினம் திட்டினேன்.
கல்யாண வீட்டில கடைசியாய் நான் நிற்க,
கண்ணா உன் நினைவு நெருஞ்சியாய் எனை தைக்க,
நீ வந்து போவதாய் அவ்வப்போது சொப்பனம்,
கண் விழித்து பார்க்கிறேன்,
நான் இப்போது நடைபிணம்.
கனவில் தான் உன்னுடன் கைகோக்கிறேன்.
உனை காணாமல் நாள்தோறும் நான் சாகிறேன்.
சொல்லாமல் சென்றது நீ இந்த முறை தான்.
எல்லாமே எனக்கு நீ இருந்த வரைதான்.
இனி கொல்லாமல் கொல்லும் இந்த தனிமை சிறை தான்.
என் விழியை விட்டு நீ போனாய் அன்று...
அதனாலோ விதவை என பேர் எடுத்தேன் இன்று.,

எழுதியவர் : கு.தமயந்தி (19-Feb-14, 12:46 pm)
Tanglish : thanimai thavippu
பார்வை : 1001

மேலே