எனக்குத் தெரியாமலேயே
என் வாழ்க்கையின்
ஆரம்பம்...........
என்னைக் கேட்டு
எதுவும் ஆரம்பிக்கவில்லை
என் வாழ்க்கையின்
அழுகையும்
ஆனந்தமும்
என்னைக் கேட்டு
எதுவும் நடப்பதில்லை
ஆனால்.........
என் மரணம் மட்டும்
என்னால்தான்....
என் கல்லறையின்
ஒவ்வொரு செங்கல்லையும்
நானே உருவாக்குகின்றேன்
எல்லாம்
எனக்குத் தெரியாமலேயே...?