அதிசயம் பிரமிடுகள் 3

பிரமிடுகள் பற்றி இதுவரை யாரும் சொல்லாத பல அரிய திடுக்கிடும் தகவல்களை தொடர்ச்சியாக பத்து பாகத்திற்கும் அதிகமாக சொல்லவேண்டும் என்ற ஒரு புதுமையான முயற்சியில் இந்த பதிவை தொடங்கினேன் ஆனால் நேரமின்மை மூன்றாவது பதிவே இறுதிப் பதிவாக முடிக்கப்போகிறேன். சரி நாம் இந்த பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் என்ற இறுதிப் பதிவில்.


இப்படித்தான் ஒருமுறை இந்த பிரமீடுக்குள் இருக்கும் அறைகளை எண்ணி கணக்கு சொல்லும்படி ஐநூற்று ஐம்பது கணக்காளர்களை நியமித்தாராம் அரசர் சியோப்ஸ் .அப்பொழுது அவர்கள் அந்த பிரமீட்டிற்குள் செல்லும் முன்பு ஒருவேளை நீங்கள் இதற்குள் இருக்கும் அறைகளை சரியாக எண்ணி கணக்கு சொல்லாவிட்டால் அனைவரும் கொல்லப்படுவீர்கள் என்றும் கெடு விதித்து உள்ளே அனுப்பி வைத்தாராம். அதுமட்டும் அல்லாது அவர்களுடன் நான்கு மாதத்திற்கு தேவையான உணவுகளும் சேர்த்து அனுப்பப்பட்டதாம் ஒன்றும் புரியாத கணக்கர்கள் அரசனின் ஆணைக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் பிரமீடிற்குள் சென்றவர்கள் எட்டு மாதங்கள் கழித்து என்பதுடன் நிறைவும் செய்திருந்தேன்.


அந்த எட்டு மாதங்கள் கழித்து என்ன நடந்தது என்று அறிந்துகொள்வதற்கு நீங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் இருந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சரி இனி நாம் மீண்டும் அரசர் சியோப்ஸ் பிரமீடு நோக்கி பயணிக்கலாம். எட்டு மாதங்கள் கழித்து அரசர் சியோப்ஸ் அனுப்பிய ஐநூற்று ஐம்பது கணக்காலர்களில் எட்டு பேர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்தார்களாம். அப்பொழுது அரசர் மற்றவர்கள் எல்லோரும் எங்கே என்று கேட்டதற்கு இந்த பிரமிட்டிற்குள் ஏற்ப்படுத்தி வைத்திருக்கும் மர்ம்மன்களால் இறந்து போனார்கள் என்று பதில் தந்திருக்கிறார்கள்.


அதன் பின்பு அரசர் சரி உங்களில் யார் யார் இந்த பிரமீடிற்குள் இருக்கும் அறைகளை சரியாக கணக்கு செய்திருக்கிறீர்கள் எங்கே சொல்லுங்கள் என்று கேட்க அதற்குள் எட்டு கணக்காலர்களில் ஏழு பேர் பயத்தில் எதோ வாயிக்கு வந்ததை சொல்லவே அரசர் அவர்கள் ஏழு பேரையும் கொள்வதற்கு உத்தரவிட்டாராம். இறுதியாக இருந்த கணக்கரிடம் எங்கே நீ சொல் என்று கேட்டதற்கு அந்த கணக்காளன் இவர்கள் சொன்னது போல் நீங்கள் அனுப்பிய யாரும் சாகவில்லை நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் சென்று அறைகளை எண்ணத் தொடங்கினோம். ஆனால் இத்தனை மாதங்கள் ஆகியும் எங்களால் அறைகளை எண்ணி முடிக்க இயலவில்லை அந்த அளவிற்கு அனைத்தும் ஒன்று போலவே இருந்ததனால் ஒன்றும் புரியாமல் மற்ற கணக்கர்கள் எல்லோரும் பையித்தியங்கலாக மாறிவிட்டார்கள் அவர்கள் இன்னும் பிரமிடுக்குல்லையே சுற்றித் தெரிகிறார்கள். என்று சொன்னாராம் இறுதி கணக்காளர். உடனே அரசர் இவன் சொல்வதுதான் உண்மை. இதுவரை இதை வடிவமைத்த எனக்கே இதற்குள் எத்தனை அறை உள்ளது என்று தெரியாது என்று எல்லோர் முன்னிலையிலும் சொன்னாராம்.


என்ன நண்பர்களே எட்டு மாதங்கள் தேடியும் அறைகளை எண்ணி முடிக்க இயலவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அந்த பிரமிட்டிற்குள் எத்தனை அறைகள் இருக்கும் என்று. சரி நண்பர்களே இனி நாம் பிரமிடுகள் பற்றிய பொதுவானத் தகவலுக்கு வருவோம் இது வரை செய்த ஆய்வின் படி உலகத்தில் ஏற்பட்டுள்ள திருட்டுகளில் அதிகமானத் திருட்டுகள் நடந்த இடங்களில் பிரமிடுகளுக்குதான் முதல் இடமாம். ஆம் நண்பர்களே இதுவரை இந்த பிரமிடுகளில் திருடப்பட்டிருக்கும் மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்று சொல்கிறது ஒரு ஆய்வு. அது மட்டும் இல்லாது மொத்தப் பிரமிடுகளில் இருந்து திருடப்பட்டிருக்கும் ஆபரணங்களை கணக்கிட்டால் ஆறு நுறு கண்டைனர்களில் நிரப்பலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இவற்றை விட இன்னும் நம்மை எல்லாம் ஆச்சரியத்தில் உறையவைக்கும் தகவல் என்னவென்றால் இந்த பிரமிட்டிற்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பிணங்களின் எண்ணிக்கையைவிட இது போன்று திருடுவதற்காக சென்று வழி தெரியாமல் இறந்து போனவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

எழுதியவர் : (19-Feb-14, 9:53 pm)
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே