மறந்தும் கூட என் கனவில்
தென்றல் தாலாட்டும் மெல்லிய
இரவு நேரத்தில்
கண் இமைகளை
அன்புடன் தூக்க இளவரசி
அள்ளிக் கொண்டு போக...
இனிமை சூழலில் நான் சொக்கியிருக்க
மறந்து கூட என் கனவில்
நீ வந்து விடாதே...
அப்படி நீ வந்தால்
நான்
பல இரவுகள் தூக்கமில்லாமல்
தவிக்கும் நிலை ஆகும்
அப்படி ஒரு பாவத்தை
நீ சுமக்க வேண்டாம்
என் அன்பு தேவதையே...