கானல்
என் கண்ணில் தோன்றும் கனவுகளும்,
நெஞ்சில் உதிக்கும் ஆசைகளும்,
கானலாகத்தான் மாறுகிறது.........;
கண்ணில் தோன்றும் கனவுகள்
காட்சிகளாகுமுன் களைந்து போகிறது........;
நெஞ்சில் உதிக்கும் ஆசைகளோ.........
பிரகாசிப்பதற்குமுன் உதித்த இடம் தெரியாமல்
மறைந்து போகிறது..........; -ஆனால்
அதனால் ஏற்படும் வலிமட்டும் மறையாமல்
உயிரை வதைத்துக் கொண்டிருக்கிறது.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
