நானும் அவளும்

குத்து சம்பா கஞ்சியும்
குழைய குழைய
பேச்சும்-தொட்டுக்கொள்ள
சொல்லுதடி -உன்
சிரிப்பை ......

உப்பு வெயில் மேட்டில்
உரசி உரசி
நடக்கயிலே -உள்ளங்காலு
உணரவில்லை -மண்
சூட்டை ......

புதுதாலி ஏந்தி
அழுது அழுது நீ
போகையிலே -இதயம்
மறந்ததடி -அதன்
துடிப்பை ........

எழுதியவர் : (21-Feb-14, 5:11 pm)
பார்வை : 88

மேலே