இலக்கியா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இலக்கியா |
இடம் | : THENI |
பிறந்த தேதி | : 27-Mar-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 155 |
புள்ளி | : 13 |
கண்ணிமைக்கும் நொடியெல்லாம் உன் தீண்டலும்...
கண்விழிக்கும் நொடியெல்லாம் உன் தேடல்களுமாய்...
உன் நினைவுகளே வரமாய்..
உன்னுடனான கனவுகளே என் வாழ்வாய்.....
கண்ணிமைக்கும் நொடியெல்லாம் உன் தீண்டலும்...
கண்விழிக்கும் நொடியெல்லாம் உன் தேடல்களுமாய்...
உன் நினைவுகளே வரமாய்..
உன்னுடனான கனவுகளே என் வாழ்வாய்.....
என்னைக் காண முயலும் உன் துடிப்பும்,
என் பிஞ்சுமொழி கேட்க இயலாத தவிப்பும்
தெரிகிறது எனக்கு....;
என் கால்களால் உன் கருவறை வருடி,
நான் சொல்லும் ஆறுதல் புரிகிறதா உனக்கு....
புதிதாக இணைந்த கவிச்சகோ ஒருவர் பாடலாசிரியாகிட
முகவரி கேட்கிறார்
நான் அவரிடம் வைத்த கேள்வி :
ஆண் : கவிதை எழுதுவது எப்படி சொல்லடி
பெண் :காதல் புரியடா சினேகிதா
ஆண் : காதல் புரிவது எப்படி சொல்லடி
பெண் :....
_______மேலே சொல்லுங்க பார்க்கலாம்?????
உன் புரிதல் அற்ற
பிரிதலில்
எதை கேட்கின்றாய்
என்னவனே
எடுத்துக்கொள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை
என் உயிரை தவிர..
உருவமும், நிறமும் தெரியாமல் வீசும் உன்னை,
சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.....,
உன்மீது கொண்ட அன்பினால் அல்ல...;
எங்கள் உயிர் மீது கொண்ட ஆசையால்.....;
உன்னால் தான் பூக்களின் வாசனை
எவ்வளவு இனிமையானது என்று உணர்ந்தோம்...;
உன்னால் தான் அழுகிய பொருட்களின் வாசனை
எவ்வளவு கொடுமையானது என்றும் உணர்ந்தோம்.....;
சிலசமயம் தென்றலாக உருவெடுத்து -எங்கள்
மனத்தைக் குளிரவும் வைக்கிறாய்..;
சிலசமயம் புயலாக உருவெடுத்து எங்கள்
மனதைப் பதறவும் வைக்கிறாய்........;
பூந்சோலைகளுக்குள் வீசிப் பூக்களை
சிரிக்கவும் வைக்கிறாய்.., சிதைவுரவும் வைக்கிறாய்....
கட்டளை இடுவோருக்கு நீ கட்டுப் படுவதும் இல்லை.;
கண்ணீரும் கூட சுகமாகத்தான் இருக்கிறது,
உனக்காக அழும் போதும்,
உன்னை நினைத்து அழும்போதும்.......;
வண்ணத்தையும், வாசத்தையும் நேசிதுப்பார்.,
பூக்கள் அழகாகத் தெரியும்;
வளர்வதையும்,தேய்வதையும் நேசித்துப்பார்..,
நிலவு அழகாகத் தெரியும்.....,
இருளையும், சூரிய ஒளியையும் நேசித்துப்பார்..,
இறைவனின் படைப்பு அழகாகத் தெரியும்;
வறண்டுகிடக்கும் பாலையையும்,பூத்துக் குலுங்கும்
சோலையையும் நேசித்துப்பார்.....,
இயற்க்கை அழகாகத் தெரியும்..;
வெற்றியையும்,தோல்வியையும் நேசிதுப்பார்.....
வாழும் வாழ்வு அழகாகத் தெரியும்;
நண்பர்கள்காட்டும் கோபத்தையும்,பாசத்தையும் நேசித்துப்பார்......
அவர்கள் நம்மீது கொண்ட அன்பு அழகாகத் தெரியும்;
இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும்,
அழகானவைதான்..... அதை,
ரசிக்க
நண்பர்கள் (15)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

வாசு
தமிழ்நாடு

சேகர்
Pollachi / Denmark

இணுவை லெனின்
ஈழம் (paris. )
