பாவப்பட்ட தமிழ்

உயிர் எழுத்து 12ம்
மெய் எழுத்து 18ம்
தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்
குமரிக் கண்டம் கண்ட பெருமை தமிழுக்கு உண்டு
அதனை கடல் உட்கொண்டது போல்
தமிழும் உலகிற்குள் போனது
நம் பெருமை
புலவர் கொடுத்த எழுத்து
பாவலர் கண்ட மொழி
சித்தர்கள் இளைத்த விஞ்ஞானம்
நாம் மறந்தாப் போல்
தமிழும் நம்மை மறக்கும்
அதற்கு வெகு காலமில்லை
செப்பேட்டில் செதுக்கிய தமிழ்
இன்று
அரசியலுக்கும் ஈழத்துக்கும்
மட்டும் தான் பயன்படுகிறது
தினமும் கண்ணாடி முன்னாடி நின்றால்
நம்முள் கர்வம் ஏற்பட வேண்டும்
என் தாத்தன் வள்ளுவன் கொடுத்த மொழி
என் பாட்டி அவ்வை வரர்த்த மொழி
இதனை மறந்து
ஆங்கிலம் கலந்து
பிற மொழி கலந்து
நம்மை நாமே கலப்படம் செய்து கொள்கிறோம்
கடையில் கலப்படம் நடந்தால் நீதிமன்றம் செல்வது
அதே தமிழிக்கு நடந்தால் காலத்தின் மாற்றம்
மாற்ற முடியாது என இலக்கணம் பேசுவது
நீ உன் மொழியை மறந்தால்
உன் தாய்யை மறப்பதர்க்கு சமம்
மொழியை கொச்சை படுத்தினால்
தாய்மையை கொச்சைப் படுத்துவது என் நினை
அப்பொழுது தமிழன் என்ற திமிரு வரும் ...
நாம் சளைத்தவன் அல்ல
உலகிர்க்கு மொழி தந்தவன்
அரசியல் தந்தவன்
நெறி தந்தவன்
உயிர் தந்தவன்
எண்ணற்ற செயல் செய்து
இன்று எதோ மூலையில்
இருட்டு சவத்தின் நடுவின்
குமுருகிறது பாவப்பட்ட தமிழ்....