எனக்கு உள்ளே

வர்ணிக்க முடியா அழகு வண்ண மயிலே ...
வார்த்தை வரவில்லையடி உன் அழகை கண்டாலே..

வருவது நீ என்று தெரிகிறது ......
வார்த்தை வராமல் கண்கள் அதை ரசிக்கின்றது...

வெள்ளி பனி ஓடை நடக்கின்றது ...
அதை அதை நால் வகை பூதங்களும் பார்க்கின்றது..

அச்சம் மடம் நாணம் நகர்கின்றது..
அது அசைவதை நத்தை ரசிக்கின்றது...

அருகம்புல் உன்னிடம் மண்டி இடுகின்றது ...
பனிக்கட்டி பாதம் பட்டதும் புட்கள் நடுங்குகின்றது..

இத்தனை இயற்க்கை உன்னை ரசிக்க...
என் இருவிழி இரண்டும் உன்னை ரசிக்க ..

நடந்து வரும் பாவையே...
என் நடுக்கம் தீர வேண்டுமடி உன் விரல்கள் என் உள்ளங் கையிலே .....

உதிர்ந்து விடும் ரோஜாவுக்கு வேறு
பெயருண்டோ..
இந்த உலகம் அழிந்தாலும் என் காதல்
உரு மாறாதன்றோ ...

சிலை அழகில் சிற்பியின்
கற்ப்பனையடி...
உன்னை காணாமல் எனக்கு
கற்பனை இல்லையடி ....

இயற்க்கை சொல்லும் அழகு
ஒரு பாதி நீ .....
என்னிடம் மறைந்திருக்கும் ..
மறு பாதி நீ ...

இதயங்களை பகிர உதவும் ரோஜாவுக்கு
பேச வராது ...
பேசும் ரோஜாவே உன் அழகு அந்த ரோஜாவிடம்
கிடையாது ..

நடை நடந்து வரும் முல்லை கொடி ...
மூச்சு வாங்க நேர்ந்தால் சாயடி எந்தன் மடி...
நீ படர வளர்ந்து நிற்கிறேன் மரமாயடி...
நீ படர்வதில் மாறும் என் தன் உருவமடி ...

கையை பிடித்து வரும் கார்முகிலெ ...
உன்னை கரைக்க கவிதை இடி இடிக்குது எனக்கு உள்ளே ......

எழுதியவர் : சாமுவேல் (22-Feb-14, 6:01 am)
Tanglish : enakku ulle
பார்வை : 97

மேலே