துளிப்பாக்கள்-ஷான்
ஏறி மிதித்தாலும்
வீர நடை போடுகிறது
செருப்பு
கடித்துவிட்டு
கண்ணீர் விடுகிறோம்
பச்சை மிளகாய்
தோற்றம் ஜனவரி 1
மறைவு டிசம்பர் 31
நாட்காட்டி
அடித்து பிழிந்தாலும்
மானம் காக்கிறது
ஆடை
கடல்
கரை ஏற விடுவதில்லை
அலைகள்
புதைத்தாலும்
உயிர்க்கிறது
விதை