அன்புள்ள அப்பா

அன்புள்ள அப்பா.... அன்புள்ள அப்பா....
ஆண்டவன்கூடத் தோற்றிடுவானப்பா....
கருவறைக்கு அருஞ்சொற்பொருள்
உன் தோள்கள் தானப்பா...
நீ பேசும் மௌனமொழி
இலக்கணமில்லா அழகிய கவிதையப்பா...
நான் அருகில் வந்துவிட்டாள்
உன் ஆசையெல்லாம் புதைக்கின்றாய்...
நான் மீசை வைக்கும் அழகைக்கூட
அமைதியாக ரசிக்கின்றாய்....
நான் வாழ்வில் சாதித்தால்
உன் மனதில் தீபாவளி....
அதைக் குறுக்கிட்டுக் காட்டிக்கொடுக்கும்
மழைத்துளியாய் உன் கண்ணீர்த்துளி....