பாலிதீன்

அய்யோ! மானிடா...
நீ செய்யும் தவறுக்கு
நாங்கள் பலியாவதா?
உன் வசதிக்காக
வழுவழுப்பான
காகிதம்,
தூக்கி எறியப்பட்ட
ஏரியில் உண்டேதான்
மாண்டேனடா
உன் வீட்டு கன்றுக்குட்டி,
மக்கா குப்பையென்றும்
தெரிந்தே பயன்படுத்தி
மக்காய் நீ வாழ்வதேனடா?
மண்ணில் புதைந்து
மண்புழுவும் மாண்டதடா
இனி விவசாயம் செய்ய
விண்ணை அடைவாயோ?
அர்ச்சனை தூவியதாய்
ஆங்காங்கே தெருவில் கிடக்க
சுத்தம் சுத்தமென்று
சோம்பேறி பேசுகிறான்,
நீ செய்யும் தவறுக்கு
நாங்கள் பலியாவதா?
மகிழ்ச்சியோ,
துக்கமோ
மது அருந்தும்
குவளையாய்
-----------------?
பாலிதீனை ஒழிக்க
கடைக்காரன் இல்லையென்றாலும்
கடங்காரன் கேட்கின்றான்
உன் கடையில் வாங்கிய பொருளுக்கு
பாலிதீன் பை கொடு என்று!
இனி இதை கண்டும்
கண்ட இடத்தில் இட்டால்
கண்டிப்பாக நாம் இடுகாடு
செல்லும் அவல நிலை
நம் அருகாமையில்!
மறந்து விடாதே!
விழித்துக்கொள்!
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த