ஆண்கள் வார்த்தையில் விழுகிறார்கள்பெண்கள் செயலில் விழுகிறார்கள்
இந்த தலைப்பை பார்த்தவுடன் என்னமோ ஏதோ என்று குழம்ப வேண்டாம்..
நான் பார்த்த வரையிலும் என் சுற்றம் உணர்ந்த வரையிலும் ஆண்கள் வார்த்தைகளில் மயங்குகிறார்கள்...பெண்கள் செயலில் மயங்குகிறார்கள்...அதை பற்றியே எழுதப் போகிறேன்...
ஆண்கள் வார்த்தையில் மயங்குகிறார்களா?நான் அப்படி இல்லை..என்னை யாரும் மயக்க முடியாது என்கிறீர்களா?
கொஞ்சம் உண்மையாய் உங்களை புரட்டிப் பாருங்கள்.
"உன்ன போல யாருடா இருக்கா? " என்று ஆரம்பித்து
ஒரு டீ குடிச்சுட்டே பேசலாம்டா என மாறி ....
அது போல எத்தனை டீக்களுக்கு சில்லறை சிதறியிருக்கிறீர்கள்..
"மச்சி உன்ன விட்டா எனக்கு யாருடா இருக்கா" என்று ஆரம்பித்து....இந்த lettera அவ கிட்ட குடுத்துடுடா என்று எத்தனை முறை அனுமனாய் மாறியிருக்கிறீர்கள்...(அவங்கப்பன் போலிசா இருந்தா என்ன பொறுக்கியா இருந்தா என்ன....?அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா !)
உங்கள் வேலையின் எல்லைக்குள் இல்லாத போதும்.....
"உங்களால முடியாட்டி யாரால முடியும் சார் "என்ற வார்த்தையை நம்பி ....எதனை தலை முடிகளை வெள்ளை முடிகளாய் மாற்றிக்கொண்டீர்கள்....!
"என்னடா மச்சி டூருக்கு ஏற்பாடு பன்றீங்கலாம் சொல்லவே இல்ல...." என்று நீங்கள் ஆரம்பிக்க....
நீ இல்லாமலா மச்சி....என்று சொல்லும் போது எத்தனை முறை புளகாங்கிதம் அடைந்திருக்கிறீர்கள்....!
திருப்பி பார்த்தால் வாழ்க்கை பக்கங்கள் முழுக்க வார்த்தைகள் ஆண்களை வசமாக்கியிருப்பதை உணரலாம்...
பெண்கள் செயலால் வசமாகிறார்கள்..
அவன் செமையா படியில தொங்குராண்டி....
அவன் என்னமா பைக் ஓடறான் தெரியுமா....
அவன் எனக்காக ஒரு மணி நேரம் நின்னான்பா...
இப்படி செயலால் பெண் வசீகரிக்கப்படுகிறாள்.
எந்த பெண்ணும் "நீங்க அழகா இருக்கீங்க "என்று சொன்னதும் காதல் வசப்பட்டது கிடையாது.
புகழ்ச்சி வார்த்தைக்கு பெண் மயங்குவதே இல்லை.. "நீ ரொம்ப நல்லவ..." "உன்ன போல யாருடி எனக்கு " ...இவை எதுவும் பெண்களிடம் செல்லாது..செயல் சார்ந்த விசயங்களில் தான் பெண் ஈர்க்கப்படுகிறாள்.
பிடித்தாலும் இழுத்தடிப்பது...
காத்திருப்பை சோதிக்கும் செயலே....
இது போல வாழ்க்கையில் இன்னும் பல பக்கங்கள் நீளும்...
நம் ஆண்மக்கள் அடுத்தவரின் வார்த்தை நம்பி வம்பை விலைக்கு வாங்கிய சம்பவங்கள் கணக்கின்றி நீளலாம்...பெண்களும் பல நேரங்களில் செயல்களால் கவரப்பட்டு கவிழ்ந்திருக்கலாம்...
ஒரு தோழி என்னிடம் ஒரு முறை சொன்னாள்..."நீ கத்தி பேசும் போது கூட எதிர்த்து விடுகிறேன்...ஆனால் பக்கத்தில் நின்று அமைதியாய் பேசும்போது தான் யோசிக்க முடிவதில்லை..."என.....
பெண் எதையுமே ஆதாரத்தோடு கேட்பவள்....
அவளுக்கு எதற்குமே ஒரு ஆதாரம் தேவைப்படுகிறது.
ஆணுக்கு அது தேவை இல்லை என்று தோன்றுகிறது..பொய் என்று தெரிந்தாலும் விழுந்து விடுவான் வார்த்தைகளுக்கு...
என் வாழ்வில் நான் கவிதை எழுதுவேன் என்றதும் என்னை "கவிஞர்" என்று அழைத்த பெருமை ஆண்களையே சாரும்...
பெண்களிடம் "நான் கவிதை எழுதுவேன்" என்றதும் அவர்கள் "எங்க ஏதாவது கவிதை சொல்லு கேட்போம்" என்று சோதிப்பது தான் எழுதப்படாத விதி.(பெண்களிடம் கவிஞன் என்பதே இதற்காகத் தானே !)
ஆக,
ஆணின் மனம் வார்த்தைகளாலும் பெண்ணின் மனம் செயலாலும் சோதனையாலும் வசப்படுகிறது என்பது என் வியூகம்..
இதில்,
என் பார்வையில் வாழ்வின் மாயம் எங்கே நிகழ்கிறது எனில் இந்த இருவரும் சேரும் இடத்தில் தான் இருக்கிறது..
அது வரை சுற்றத்து வார்த்தைகளில் சிக்கி இருந்தவன் சுதந்திரமாய் செயல்படுகிறான்.
அது வரை செயல்களை சோதித்த பின்னே நம்பியவள் இப்போது அதிகம் பேசுகிறாள். தன் ரகசிய ஆசைகள் முதற்கொண்டு அவனோடு பகிர்கிறாள்..
நான் எப்படி இப்படி ஆனேன் என்று யோசிக்கும் பெண்கள் வெகு அதிகம்...
ஆனால்...
இந்த இருவர் தாண்டிய தனி உலகம்...அப்படியே தான் இருக்கிறது...வெளியே அவன் இன்னமும் ஓசி டீ வாங்கிக் கொடுத்தபடி தான் இருக்கிறான்...அவளும் கண்ணீரை நம்பி காசு கொடுத்தபடி தான் இருக்கிறாள்...
ஆனால்..இருவரின் இதயமும் சேரும் போது ....
அவன் யார் வார்த்தைக்கும் மயங்காமல் இயங்குகிறான்..அவளும் செயல்களை அதிகம் சாராமல் பேசுகிறாள்...
ஆக, இருவரின் புற இறுக்கங்களும் மறைந்து அவர்களின் அகம் நெருங்குகிறது...
இன்னும் தெளிவாக சொன்னால் ஒரு கவிதையில் சொல்லி விடலாம்....
"எங்கே இருக்கிறாய்
என் காதலே..?
புற இறுக்கம் எனை
நொறுக்கும் போதெல்லாம்....
உன் அக நெருக்கம் ...
கேட்கிறது என் இதயம்..(இது இருபாலருக்கும் பொருந்தும்)