நூராண்டு கண்ட நாயகன்

மனித சரித்திரத்தின் சாட்சியே ..!
நாகரீகத்தின் உச்ச கட்டமே ..........!
அறிவியலின் ஒப்பற்ற அழகே......!-உப்புக்
கடலின் ஒய்யாரமாய் நின்றிருக்கும் பேரழகே

நூற்றாண்டை கண்ட அற்புதமே ...!
மனித சக்தியின் பேருருவே....!
ரயிலுக்கு தலை வணங்குகிறாய்..!
கப்பலுக்கு கரம் கூப்பி வழி விடுகிறாய் ...!

பணிவும் பண்பும் உயர்வும் தாழ்வும்
மனித குலத்துக்கு ஒப்பற்ற இரு கண்கள்
என்ற தத்துவத்தை சொல்லி - தலை
நிமிர்ந்து நிற்கும் பாம்பன் பாலமே
நீ பல்லாண்டு ...! பல்லாண்டு ...! பலகோடி
நுராண்டு வாழ்க ..! வாழ்க ...! வாழியவே ...!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (24-Feb-14, 12:11 pm)
பார்வை : 86

மேலே