இயற்கையின் முதல் அதிசயம் காதல் 555
காதல்...
காதல் மூன்று
எழுத்து அதிசயம்...
காதல் கற்பிக்க
படுவதும் இல்லை...
கற்க படுவதுமில்லை...
காவியங்களுக்கும்
காப்பியங்களுக்கும்...
காதலே கரு...
மொழிகள் தோன்றுமுன்
உருவான முதல் மொழி...
காதல் மொழி...
மனிதனால் உருவாக்க
பட்ட சில அதிசயங்கள்...
இயற்கையின் சில
அதிசயங்கள்...
உலகின் முதல்
அதிசயம் காதல்...
விழிகள்
மோதிக்கொண்டும்...
இதயங்கள்
பேசிக்கொண்டும்...
இதழ்களின்
மௌனத்தாலும்
உருவான காதல்...
அதிசயம் தான்...
உலகின் முதல்
அதிசயம் காதல்...
காதல்...காதல்...காதல்.....