உங்களுக்கும் பிடிக்கும்


மலரைத் தேடும் பட்டாம்பூச்சி
வண்ணம் பார்க்க பிடிக்கும்
மனதைக் கவர்ந்த நண்பரோடு
நேரம் போக்கப் பிடிக்கும்
சிலரின் தோளில் சாய்ந்து கொண்டு
சோகம் பகிரப் பிடிக்கும்
சிரிக்கும் பெண்ணின் சேலையாகி
சேட்டை செய்யப் பிடிக்கும்

பறவை பறக்கும் வானம்பார்த்து
நகங்கள் உரசப் பிடிக்கும்
பாதம்கூச விரல்கள் தேய்க்க
பிறக்கும் கூச்சம் பிடிக்கும்
விறைக்கும் குளிரில் நெருப்பு மூட்டி
வெதுப்பில் அமரப் பிடிக்கும்
வெள்ளை உடையில் வண்ணக் குளியல்
மூழ்கியாடப் பிடிக்கும்

எழுதியவர் : Rishivardhan (15-Feb-11, 12:45 pm)
சேர்த்தது : rishivardhan
பார்வை : 313

மேலே