உனக்கே நியாயமா இருந்தால் சரி - மணியன்

***** ஏங்க நாம ரெண்டு பேரும்தானே துணிக்கடைக்கு வந்தோம். நான் புடவை எடுத்துட்டு வர கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது. சும்மா வெளியே வேடிக்கை பார்த்துகிட்டு நிற்குறீங்களே. இந்த புடவை நல்லாருக்கான்னு பார்த்து சொல்லுங்களேன்.

===== அடிப்பாவி . . . கொஞ்சம் தாமதமா. . டில்லியில கேஜ்ரிவால் முதல்வர் ஆனப்ப கடைக்குள்ள வந்தோம். அவரு ராஜினாமா கூட பண்ணிட்டாரு. இதைப் போய் கொஞ்சம் தாமதம் என்று சொல்லுகிறாயே . . . உனக்கே நியாயமாக இருந்தால் சரிதான். . . . .

***** அடடா. . .அவ்வளவு சீக்கிரமாவா நான் புடவை எடுத்துட்டேன். போங்க நீங்க . வர வர உங்க விளையாட்டுப் பேச்சுக்கு அளவே இல்லாம போச்சு. இந்த கிண்டல்தானே வேணாங்குறது. .

எழுதியவர் : மல்லி மணியன் (26-Feb-14, 12:03 am)
பார்வை : 287

மேலே