புதிய சொல் மலர் கல்பனா பாரதி
மலர் TELEVISION க்கு புதிய சொல் ஒன்று
உருவாக்கியிருக்கிறார்.புதுச் சொல் பற்றிய
எனது காணல் சரிதானா என்று நீங்களும்
பாருங்கள்.
ரேடியோ தமிழில் வானொலி என்று
அழகாக மொழிபெயர்க்கப் பட்டது.
அதே போல் TELEVISION TELE---தூரம்
அல்லது தொலைவு VISION --காட்சி
அதிலிருந்து VERBATIM TRANSLATION
ஆக தொலைக் காட்சி என்று அழகாகவும் சரியாகவும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது .பயன்பாட்டிலும் உள்ளது.இன்னொரு பெயர் காணலில் தவறொன்றும் இல்லை . CELL PHONE
அல்லது MOBILE PHONE கை பேசி
என்றும் அலை பேசி என்றும் அழைக்கிறோம் . அதில் காணலும் அல்லது காட்சியும் இருக்கிறது என்றாலும் காட்சியின் அறிவியல்
முன்னேற்றம் பின்னால்தான் ஏற்பட்டது
ஆதலால் பேசி நிலைபெற்று விட்டது
உங்கள் புதிய சொல் உருவாக்கம்
தர்க்க ரீதியாகவும் சொல்லழகிலும்
பொருளுடன் இருக்கிறதா என்பதை
சற்று அலசிப் பார்ப்போம்.
காண + ஒளி + ஒலி = காணொளி ஒலி
சற்று நீளம் ; ஒலி தனித்து நிற்கிறது.
சொல்லும் போது நாக்கு சுழல்கிறது
காணொளி என்று ஏன் சொல்லக்
கூடாது. காண ---கண்ணினால்
காண்பது . ஒளியினால்தான் கண்ணுக்கு
காட்சி. ஆகையால் காணலில் ஒளி
இருக்கிறது. கேட்டிட ஒலி தருகிறது
காணல் ஒளியும் கேட்டல் ஒலியும்
இணைந்து வரும் கருவிக்கு
காணொலி பெயர் மிகவும் பொருத்தமே
கேட்டு ரசித்திட வானொலி போல்
பார்த்தும் கேட்டும் ரசித்திட காணொலி .
வானொலிக்கு மார்கோனிக்கு நன்றி
சொல்கிறோம்.
காணொலி க்கு .......? யோசித்துக்
கொண்டிருங்கள்
நான் மலருக்கு நன்றி சொல்கிறேன்
~~~கல்பனா பாரதி~~~