கரும்பாய் நீ, எறும்பாய் நான்
கரும்பாய் நீ.
எறும்பாய் நான்!
மெதுவாக மேலேறி...
மேனியெல்லாம் ஊறி...
அணுவணுவாய் ரசித்து...
கணுக்கணுவாய் ருசித்து...
கடித்துச் சுவைக்கின்றேன் நான்.
துடித்துச் சிலிர்க்கின்றாய் நீ!
உன் மேனி தழுவித் தழுவி
என் உதிரம் சூடேற...
என்னுயிரும் உன்னுயிரும்
ஒன்றாகக் கலந்து நிற்க...
என் உலகம் நீயடி!
என் உதிரம் தீயடி!
உள்ளுக்குள் புள்ளி வைத்தால்
ஒரு புள்ளி நூறடி!
மீண்டும் உன்னை நான் சுவைக்க...
மீண்டும் உன்னில் தேன் சுரக்க...
திகட்டாத மதுரம் நீ!
தீராத மதுவும் நீ!
தீஞ்சுவைக் கன்னல் நீ!
தீயினுள் இன்பம் நீ!
இன்னும் பல முறை நீ திறக்க...
இன்னும் பல சுவை நான் பருக...
மயக்கம் எனக்குள்ளே!
தயக்கம் ஏன் உனக்குள்ளே?
கட்டியணைத்தாலும்
கடித்துச் சிதைத்தாலும்
தேன் சுரக்கும் தேகம் நீ!
ஆடை கலைந்தாலும்
அங்கமெல்லாம் குலைந்தாலும்
மனம் மயக்கும் மணமும் நீ!
எனக்குள் முழுதும் நீ நிறைந்தாய்
உனக்குள் முழுதும் நான் மறைந்தேன்!
என்னில் மீண்டும் நீ கலந்தாய்
உன்னில் மீண்டும் நான் கரைந்தேன்!
தேகமெல்லாம் சுவைப்பதற்கு -
தேனள்ளிக் குடிப்பதற்கு -
இன்றைய நாள் கொஞ்சமடி,
இந்த
ஜென்மம் உன் மடி தஞ்சமடி!