ஏழையின் குமுறல்
தான் உண்ணும் அரிசியில
தான் பேரே இருக்குமுன்னு
முன்னோர்கள் சொல்லக்கேட்டு
என் பேர தேடிப்போக
என் பேரிட்ட அரிசியத்தான்
காணலியே என் குலசாமி ???
என்னத்தான் நினைவில்லையா ???
என் குடும்பத்தையே நினைவில்லையா ???
என்ன பாவம் செஞ்சுபுட்டோம் ???
ஏழையா பொறந்தது தான்
பாவமுன்னு நினைசுக்கிட்டோம் ...
மனிஷங்க எங்கள மறக்கையில
இயல்புன்னு தான் நினைச்சிக்கிட்டோம் ...
குலசாமியே மறக்கையில
மூலையில அழுதுகிட்டோம் ...
மூட்ட தூக்கி பிழைக்கிறேனே
வேர்வ சிந்தி ஒழைக்கிறேனே
கள்ளத்தனம் செய்யலியே
இருந்தும் என்ன மறந்ததென்ன ???
கையில் தூக்கும் அரிசி தனை
வாயில வைக்க முடியலையே...
வயிறு ஒட்டிக்கிடக்கும் போதும்
நேர்மையில மாறலியே...
திருடிப்பிழைக்கும் மனுஷனையும்
உன் நெனப்புக்குள்ள வைப்பதென்ன ???
நெனப்புல வெச்ச அவன் பெயர
அரிசியில இடுவதென்ன???
தூக்கிப்போடும் சோறில் கூட
தெரு நாயின் பேரு இருக்குதுங்க...
நாயை கூட மனசில் வெச்ச உங்க கருணையில
இந்த ஏழை தனை நெனச்சுக்காம போனதென்ன????