கல்லணைக்கோர் பயணம்33

கல்லணைக்கோர் பயணம்..33
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )

பழைய நினைவுகளை
அசைபோட்ட படி
கல்லணை நோக்கி
மெல்ல நடக்கையில்
இது போன்ற
சுற்றுலா நினைவு
தொற்றிக் கொண்டது
மனதினில் மெல்ல..
விடுதி வாழ்கையில்
வெளியுலகு மறந்து
படிப்பே வாழ்க்கையானது
அந்த தருணத்தில்
குற்றாலம் சுற்றுலா
செல்ல முடிவெடுத்தனர்
நானும் தயாரானேன்
மனமெங்கும் ஆசை
வெள்ளம் அலைபாய..

அந்தநாளும் வந்தது
ஆசையாய் ஏறினோம்
அவசரமாய் பேருந்தில்
இரவில் விடுதியில்
கைதிகளை காப்பாற்றி
எழில் தேசத்திற்கு
அழைத்து சென்றது,
விடிய விடிய
உறங்கி விழிக்கையில்
பல்லாயிரம் லிட்டர்
பால் பாறையில்
ஊற்றெடுத்து வழிந்தது
அழகிய அருவியாய்
காலைநேர மென்தென்றல்
மேனி உரசியபோது
மனமெங்கும் ஆனந்த
வெள்ளம் ஆர்பரித்தது
அள்ள அள்ள குறையாமல்

அருகில் செல்ல செல்ல
மென்சாரல் மேனிதீண்டி
சிலிர்ப்பான வரவேற்ப்பை
சிறப்பாய் அளித்தது
அதிகாலை குளியல்
விடுதியில் பழகியதால்
பொறுமையை உடைகளோடு
ஓரமாய் வைத்துவிட்டு
வேகமாய் ஓடினோம்
வெள்ளைப் பனியில்
துள்ளிக் குதிக்க..
மென்சாரல் மெதுவாய்
வருடி ஆசையாயழைக்க
அருகில் சென்றதும்
வேகமாய் பாய்ந்தது
எங்கள்மேல் ஆவலாய்
பயணித்த களைப்பு
காணமல் போனது
அருவியின் தர்மடியால்..

குற்றால கடைவீதியில்
கால்பதித்தோம் நண்பர்களுடன்
கையிலிருந்த காசிற்கேற்ப
பொருட்களை வாங்கினோம்,
சுற்றுலா செல்ல
அப்பா ஆசையாய்
வாங்கிக் கொடுத்த
மஞ்சள்நிற தண்ணீர்டப்பாவை
கழற்றவில்லை கழுத்தைவிட்டு
ஒருகடையில் மூலிகையெண்ணை
முடிவளர வாங்கினேன்
வாங்கியது தவறென
பின்புணர்ந்தேன் அன்பு
நண்பனின் விபரீத ஆசையால்
நெருங்கிய நண்பர்களில்
கல்லகம் லாரன்ஸ்
வகுப்பிலேயே குள்ளமானவன்
மூன்றுபேர் வரிசையாய்
கைகோர்த்து அனைவரும்
அணிவகுத்து செல்ல
எண்ணையை பார்த்து
என்னவென்றான் அவன்
முடிவளரும் மூலிகையெண்ணை
என்றுநான் கூற முடிகொட்டும்
கல்லக்குடி அந்தோணிக்கு
மிகவும் உதவும் என்றான்
என்னைமட்டும் பிரித்தான்
எல்லோரும் சென்ற
நீண்ட வரிசையிலிருந்து..

(பயணிப்போம்...33)

எழுதியவர் : ஆரோக்யா (27-Feb-14, 9:38 pm)
பார்வை : 59

மேலே