மழை மகள்
கருநீல வானத்தில்
மின்னும் (அ)ஜ்வலிக்கும்
நஷத்திரத்தை என் எதிரில் பார்த்தேன்
தார் ரோடில் பட்டுத் தெறிக்கும்
மழைத் துளி!
வெள்ளிக்கமபியாய் வானிலிருந்து
இறங்கி கரிய தார் ரோட்டில்
குதித்து குதித்து சந்தோஷமாய்
நடனமாடினாள் மழை மகள்
அவள் நடனத்தையும் அதை ரசித்த
என் ரசனையையும் ஒரே நேரத்தில்
அழித்தது ஒரு வானின் டயர்