சிவனே
பித்தனே ...! பித்து
பிடித்தோருக்கு எத்தனே ...!
பிடி சாம்பலே உலகம்
என்ற தத்துவத்தின்
வித்தானவனே....!
சடையனே ..! சஞ்சலத்தை ..!
அறுத்து புலித் தோலை
பஞ்சனையாக்கிவனே ...!
சொத்து தகராறில்
ஒருத்திக்கு சடையில்
இடமளித்து - உற்ற
துணைக்கு உடலில்
சரி பாதி தந்தவனே...!
பிறையை சடையில் சூடி
பிறப் பிறப்புக்கு மூலமானவனே ...!
உயர் சத்தானவனே - ஞான
சாரமானவனே- திரி சடையில்
கழிசடைகளை கழுவி
அன்பு முத்தானவனே ...!
முத் தமிழை ஈன்ரெடுத்த
முக் கண்ணனே... சர்வத்துக்கும்
சமமாய் இருக்கும் சங்கரனே ...!
ஐங்கரனின் அப்பனே ..! ஞான
சுப்பனே ..! அபயம் என்று
வாருவோர்ற்கு அடைக்கலம்
ஆனவனே ..! சிவனே போற்றி ..!