இருளின் அரசி

என்னை அபகரிக்கும்
ஆண்டவனின் அழகான
படைப்பு நீ ..!

என் உள்ளத்தை
கொள்ளை கொள்ளும்
கள்ளியும் நீ ..!

அச்சமின்றி அகிலத்தை
இரவில் உலா வரும்
அரசியும் நீ..!

கோடி நட்சத்திரங்கள்
இருந்தாலும் பிரகாசிப்பது
என்னவோ உன் முகம் தான் ..!

தரையில் படுத்து
உன் முகம் பார்க்க
தரணியை மறக்க வைக்கும்
தாரகை நீ..!

என்னை தாலாட்டும் தாயாய்
என்னோடு பேசும் தோழியாய்
கவிதை எழுத வைக்கும் காதலாய்
கார் இருளில் கலக்கும் தேவதை நீ..!
"என் நேச நிலவே ..!!!"

எழுதியவர் : ரம்யா எம் ஆனந்த் (28-Feb-14, 9:03 am)
பார்வை : 145

மேலே