கனவுகளின் திருவிழா
![](https://eluthu.com/images/loading.gif)
நீ எந்த
வாகனத்தில் போகின்றாய்
என் கனவுக் கண்களைத்
தொலைத்துவிட்டு !
கண்களை மூடியதும்
எனக்கு சில கனவுகள்
உன்னைக் காண முடியாமல்!
வண்ணத் திரைப்படங்கள்
காண வந்த
கருப்பு வெள்ளைத் திரைப்படங்களோ
உன் கண்கள் !
கவனமாகச் செல்
இது கனவுகள் நிறைந்த
கனவுச் சாலை !
இந்த கனவுகள் எல்லாம்
மெய்யாய் இருந்து விடாதோ
இமைகள் மூடும் வரை !