உனக்காகவே நான் - குமரிபையன்

காதலென்னும் தோட்டத்திலே
கை கோர்த்து நடந்தவளே ..!
வண்ண நிற வானத்தில்
வான்மதியாய் வலம் வந்தவளே..!

கறைபடியா உயர் கற்போடு
காதல் கவி வடித்தவளே...!
கடலலைபோல் என் கால்களை
கடைசியில் தொட்டு மறைந்தவளே...!

சாதி மதத்தின் உருசொல்லி
சாட்டாம் பிள்ளை உறவுகளும்..!
சாவை சொன்ன தாய்மடியில்
சரிந்து அங்கே தோற்றவளே..!

அப்பா போட்ட ஆணையிலே
தப்பாது எனை தொலைத்தவளே ...!
காதலை முழுகி என்சிந்தையிலே
கனவு வாழ்க்கை கலைத்தவளே..!

அக்னி சாட்சியின் முன்னாலே
அழகு மாலை போட்டவளே..!
தட புடலாய் தாரமாகி
தாரை வார்த்து சென்றவளே..!

கைபிடித்த உன் மன்னவனும்
கைம்பெண்ணாக்கி சென்றானே..!
காலம் ஆண்டாய் ஆனபின்னும்
கண்ணீர் அபலையாய் நிற்கிறாயே..!

கோலம் உன்னில் மாறிடலாம்
கோலங்கள் நீரில் அழிந்திடலாம்..!.
கொண்ட காதல் மாயல்லையே
கண்ட கனவும் மறக்கல்லையே..!

பறவை இரண்டு பறந்தகாட்டில்
பாதி பறவை காத்திருக்கு..!
மீதி பறவையாய் நீ வந்தால்
மீண்டும் பறந்திடும் இருபறவை..!

காதலனாய் நான் காத்திருக்கேன்
கண்ட நம் கனவு மெய்படவே...!
கண்ணீர் துடைத்து வாபெண்ணே
கணவனாய் கை நீட்டுகிறேன்..!

எழுதியவர் : குமரி பையன் (1-Mar-14, 12:06 am)
பார்வை : 1074

மேலே