முகமும் முகமூடியும்

முகப் புத்தகத்தில் கண்டேன்
அவள் ...
வதனப் பூ ....
பக்கத்தின் முகப்பில் ....
அவளின் புகைப் படம்...
வனப்பு .....
அக்கணமே ...
அழைப்பு ...
விடுத்தேன்...
நட்பு ....
மறுக்காமல் ...
அவளும் ஏற்றாள்...
எனக்குள் ...பூரிப்பு
விருப்புகளும் ....
கருத்துகளும் கலந்து ....
வளர்ந்தது நம் ...
தொடர்பு .....
குறுந் தகவல்களிலும் ...
(chat ) வரி அளவளாவல்களிலும்....
பூத்தது நமக்குள் ....
காதல் பூ ...
அவளை நேரில் கண்ட போது தான் ...
அறிந்து கொண்டேன் ....
அவள் முகபுத்தகத்தில் பூத்த....
பூ அல்ல ..
முகமூடிப் பூ ...
அவள் பக்கத்தின் முகப்பில் ....
சிரிக்கும் புகைப்படம் ....
யாரிடமோ இரவல் பெற்ற ...
காகிதப் பூ .........