புதிய பயணத்துக்காக

புனிதமான பூமியில்
ஒரு போலியான உறவை
இவன் பார்க்க விரும்பவில்லை
நிலையான உதட்டில்
நிலையில்லாத வார்த்தைகள் - பல நூறு
அழகான உறவுகளின்
அழகற்ற மன வெளிப்பாடுகள்
இனியும் தாங்காது இவனது உள்ளம்
புகையிரதத்தின் இசை இவனுக்கு
இன்பம் அளிக்கின்றது
தண்டவாளம் இவனுக்கு
தலையணை ஆகின்றது
புகையிரதத்தின் அரவணைப்பு
இவனுக்கு நிலையான இன்பமாம்
புதிய பயணத்துக்காக காத்து நிற்கிறான்.