எண்ணம்

எழுத்துக்கள் கோர்த்து
வார்த்தை செய்வோம்,
வார்த்தைகளினால்
நட்பை வளர்ப்போம்,
நட்பின் துணை கொண்டு
நன்மைகள் செய்திடுவோம்,
எழுத்தின் அடிப்படையாய்
நாமில் என்றும் நல்
எண்ணமே கொள்வோம்,
நம் காணும் அனைத்தும்
எண்ணத்தின் வெளிபாடே
எண்ணத்தில் தூய்மை கொண்டு
நல் உலகினை உருவாக்குவோம்
உண்மையின் வழி நடந்து
உதாரணமாய் திகழ்வோம்