உன்னுடனான யுத்தம்

யாருக்கும் கேட்பதேயில்லை
என் கண்களில் அலையும்...
உன் காதல் அலைகளின் சப்தம்.

மோதித் திரும்பும் ...
கவிதைகளும் நீந்தி நழுவுகின்றன...
பாறை இடுக்குகளிலிருந்து
திசையற்றுப் பிரியும்...
மீன் குஞ்சுப் பட்டாளமென.

காற்றாகி விடும் உடல்...
கனவுகளால் நிரம்பி விட...
எனக்கு வெளியே அலைகிறது...
ஒரு திருட்டுப் பார்வையோடு
எனது உறக்கம்.

என் வாசனை எப்போதும்
மிச்சமிருக்கும் எனது அறையின்...
முழு நீளக் கண்ணாடியில்...
வளைந்து நெளிகிறது....
ஒரு மந்திரச் சொல்லென
என் உதடுகளில் எப்போதும் நீந்தும்
உனது பெயர்.

வானம் கவிழ்ந்து...
கடல் தொடும் கணங்களில்
புதிராகிவிடும் எனது இருப்பில்...

தினம் துவங்குகிறது...
நான் எப்போதும் வெல்ல விரும்பாத
உன்னுடனான யுத்தம்.

எழுதியவர் : rameshalam (1-Mar-14, 2:47 pm)
Tanglish : unnudanana yutham
பார்வை : 75

மேலே