தென்னை மைந்தன்

நிலம் என்னும் நல்லாள்
இன்றெடுத்த செல்வன்
தலைக்கு மேல் வளர்ந்து விட்டானே !
அவன் வானத்தை நோக்கி
வளர்ந்ததை பார்த்து
பெருமுச்சு விடுகிறாள் அவன் தாய்.
உலகத்தை மறந்து விடாதே
என்று தாயின் அன்பு கட்டளை!
அவன் கூறுகிறான்
மறக்க மாட்டேன் தாயே
உன்னையும் இந்த மனிதரையும்!
அதற்காக தானே என்னை
வளர்த்தவர் வாழ
இளநீரை தருகிறேன் என்றான்
அந்த தென்னை மைந்தன்!

எழுதியவர் : sai (1-Mar-14, 6:33 pm)
சேர்த்தது : சாய்
Tanglish : thennai mainthan
பார்வை : 76

மேலே