மீண்டும் கனவுTHE DREAM AGAIN
அன்று ஒரு நாள்,
அவள் என் கனவில் வந்ததை எழுதினேன்,
இப்போது மீண்டும் கனவில் வந்ததை
இன்று எழுதுகிறேன்.
அன்று அவள்
என் கனவில்
என்னைத் தேடிய காதலி;
இன்றைய கனவில்
என் உண்மையான நினைவில்,
அவள் வேறொருவனுக்கு
நிச்சயிக்கப்பட்ட பெண்மணி.
"அது ஒரு விழா
கல்லூரி நண்பர்களையும்
என்னையும் அழைத்திருக்கிறார்கள்.
அவ்விழாவில்
ஒருவன் பிறந்தநாள் கொண்டாடுகிறான்
(அவன் தான் அவளுக்கு நிச்சயிக்கப்பட்டவன்)
அவனின் தந்தை
என்னவளை அழைக்கிறார்.
அவளும் செல்கிறாள்
அவர்தன் மகனிடம்
அவர்களின் காதலுக்கிடையில்
யாரும் இருக்க வேண்டாம் என்கிறார்."
அதோடு,
கனவு கலைந்தது
அந்த இரவிலும்,
என் வாழ்விலும்.