கசந்து போவதேன்
அங்கமெல்லாம் பூமிக்கு
தங்கமுலாம் பூசும்
அந்தி சாயும் ஆதவன்.
வாசம் சுமந்து வந்து
வளர்ந்து நிற்கும் நாத்தை
வருடி போகும் இளந்தென்றல்.
மெல்ல நடை நடந்து
மண்ணின் உயிர் காத்து
மகிழும் வாய்க்கால் தண்ணீர்.
கரையாயிருந்து காத்திடும்
ஊர்களைத் தொட்டு
செல்லும் நெடுஞ்சாலை.
இயற்கையின் படைப்பில்
ஒன்றுக்கொன்று உறவாடி
உதவி செய்திடும்போது
வயதான பெற்றோரை
பெத்தெடுத்த பிள்ளைகளே
அநாதையாய் விடலாமோ?
கசக்கும் காய்கூட
இனிக்கும் முதுமையில்
இறைவனின் படைப்பது
புவியில் வாழும் மனிதன்
முதிர்ந்து பழுத்தபின்
கசந்து போவதேன்?
படைத்தது இறைவனென்றால்
முதிர்ந்த மாந்தருக்கு
அவனும் கசந்து போவான்!