நாளைய உதயத்தின் புதிய கதிர்கள் நீ

தின்ன தின்ன
தெவிட்டாத
தேவாமிர்தம் நீ
என்றால்........

தெரு நாய்களுக்கு
கொண்டாட்டம்
தானே..........!

**************************************

உன் இதழ்களில்
தேன் சுரந்தால்
வண்டுகள் மொய்க்கதானே
செய்யும்.............

திராவகம்
சுரந்தால்............?

****************************************

இளமையின் ஊற்று
நீ ........என ஆணவம்
கொள்ளாதே.........!

முக்குளிக்க காத்திருக்கும்
மாய மீன்கள்
ஏராளம்........!

*******************************************

உன் மை தீட்டிய
விழிகள்....
மெய் காதலனுக்கென
பறை சாற்ற வேண்டாமா.......?

ஆடைக்கு பஞ்சம்
வைத்து.....
ஆந்தைகளுக்கு
அழைப்பு விடுக்கலாமோ.......?

வேண்டா காதல்
கூட நட்பு.......
வெப்பச்சலனங்களில்
வியர்வைத்துளிகளே
மிஞ்சும் அறியுமோ.......?

கழுத்திற்கு கீழ்
கண்கள் செல்ல
கண்ணிமைகளில் கத்தி
வைக்க வேண்டாவோ........?

வறண்ட இதயங்களில்
வானவில் ஆகலாமோ.....
வாடிய பூக்கலன்றோ
உனக்கு வாசம் தரும்........!

பேதை பெண்ணே........
போதை உலகம்
இது........!

உன் அழகின் ஒளியில்
ஆழம் செல்.......!

நடையின் வேகத்தில்
நடைபிணமாக்கு........!

ஒற்றை பார்வையில்
விழிகளை வழிப்பறி செய்.......!

மௌனத்தேடலில்
மயானம் திற.......!

புரிந்து கொள்.......
நம் பலம்
பலவீனம்
இரண்டுமே நாம் பெண் என்பதுவே............!

புல்லின் நுனியில்
பனித்துளி
நீ அல்ல.......!

பூவின் இதழ்களில்
தேன்துளி
நீ அல்ல.......!

நாளைய உதயத்தின்
புதிய கதிர்கள்
நீ......................................!




நம் வாழ்வு
நம் கையில்..............!

எழுதியவர் : வித்யா (2-Mar-14, 11:34 am)
பார்வை : 353

புதிய படைப்புகள்

மேலே