பாவக்கணக்கு

பாவக்கணக்கு.

நான் சொல்லியழுதிடாத சொந்தக் கதை கேளு
நான் எண்ணி உறங்கிடாத அந்தக் கதை கேளு-இங்க
சொந்தமென்ன பந்தமென்ன ஒண்ணுமில்லையே
என் தாயே தெய்வமே!—அவள்
சொன்னாள் கேக்கலயே!

அத எழுத்தாலே சொல்லி அழுதா
அந்த எழுத்துக்கும் உயிர் வருமே!
ஒரு பாட்டாலே எழுதிப் படிச்சா
அடப் பாட்டுங் கூடக் கூடி அழுமே!
அந்தப் பாவம் மறக்க நான் பாட்டுப் படிக்க
எந்தப் பாவி மனசும் நொந்து துடிக்கும்.
இதக் கேட்டுத் திருந்த ஒரு ஆளு இருந்தா
செஞ்ச பாவம் தீரும் எனக்கு.
தாயி சொல்லத் தூக்கி எறிஞ்சேன்
அய்யோ குடியாலே கெட்டு அழிஞ்சேன்

நான் ஆகாரம் இல்லா அங்கே போற நேரம்`
நான் ஊரோடும் சேர உறவு ரொம்பத் தூரம்.
என் உடம்பக்கூட தூக்கிச் சுமக்க ஊக்கமில்லையே.
அப்போத் திமிரு கேளாது.
இப்போ அழுதாத் தீராது

தரையில நான் படுத்திருந்தா தாய் மனசு கேளாது
தலையணயும் மறந்திருந்தா தன்மடியத் தந்திடுவாள்.
உண்ணாமப் படுத்துவிட்டா ஊட்டிவிட்டு தூங்கவப்பாள்.
இந்தப் பாவியால அந்தத் தாயுந்தான்
என்ன விட்டுந்தான் போய் மறஞ்சாளே!
நான் தின்னாத பண்டமும் இல்ல
நான் பண்ணாத சேட்டையும் இல்ல
நான் போடாத சட்டையும் இல்ல
நான் ஆடாத ஆட்டமும் இல்ல
சேறு தண்ணி இப்போ மெத்தை இருக்கு
நாறத் தண்ணி இப்போ சோறு எனக்கு.
பேரு தொலஞ்ச குடிகாரன் எனக்கு.
அந்தத் தேரு ஏறவும் என்ன இருக்கு.
நான் பாடுகிறேன் பாட்டு உனக்கு
சாமி குடிக்காதே நானே கணக்கு.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (2-Mar-14, 11:11 am)
பார்வை : 268

மேலே