ஒரு விளம்பரம்

பெண் விளம்பரப்படுத்தப் படுகிறாள், ஆண் விளம்பரப்பட நினைக்கிறான்
சவரக்கத்தி விளம்பரத்தில் மங்கையொருத்தி ஆடவன் முகம் தடவி நிற்கிறாள்
செண்ட் , ஸ்பிரே விளம்பரத்திலும் ஆடவனின் பின்னே மதி மயங்கி ஓடுகிறாள்
நகை எது நங்கை எதுவென்றறியாத வண்ணம் வாரியணிந்து நிற்கிறாள்
அனைத்து பெண்டிரையும் சிகப்பாக்க பெயின்டடித்து வருகிறாள்
பெயின்ட் விளம்பரத்திற்கு சிகப்படித்து வருகிறாள்
கார் அறிமுக விழாவில் காரைத் தடவி நிற்கிறாள்
நகைக்கடை திறக்க திறந்த உடையில் வருகறாள்
ஆடவனோ?
குளிர்பானத்திற்காக மலை ஏறுகிறான், பாலத்தில் இருந்து குதிக்கிறான், நடனமாடுகிறான்
பனியனைக் கழற்றி பெண்ணைக் காக்கிறான்
நகைக்கடையில் புரட்சி செய்கிறான்
டீ குடித்து காபி குடித்து புரிந்து கொள்ளுங்கள் என்கிறான்
சுவரொட்டி பிளக்ஸ்களில் பல் இளித்து நிற்கிறான்
மீசை முளைக்கும் முன் நடிகன் தலையில் தன் தலை ஒட்டி மகிழ்கிறான்
சமத்துவமில்லை என்று யார் சொன்னது?
ஆணும் பெண்ணும் சமம்-இந்த விளம்பர உலகில்
பெண் விளம்பரப்படுத்தப் படுகிறாள், ஆண் விளம்பரப்பட நினைக்கிறான்

எழுதியவர் : நிக்கல்சன் (2-Mar-14, 3:40 pm)
சேர்த்தது : நிக்கல்சன்
Tanglish : oru vilamparam
பார்வை : 78

மேலே