அவள் ஒரு புதிர்

நான் அவளிடம் காட்டும் அன்பு
துன்பத்தை தருகின்றது...

நான் அவளிடம் வைக்கும் பாசம்
பாரமாக தெரிகிறது...

நானோ அவளை நெருங்கி போய்கிறேன்
மனதளவில்...ஆனால்

அவளோ விலகி போகிறாள்
வெகு தொலைவில்...அதன்
அர்த்தம் புரியவில்லை எனக்கு....

அன்று என்னிடம் அவள்
அன்பு காட்டாமல் இருந்திருந்தால்....

இன்று நான் இப்படி
நடை பிணமாக இருந்திருக்க மாட்டேன்...

ஏன் இந்த மாற்றம்
தெரியவில்லை எனக்கு...

அவளை கண்டதும் தானாகவே
அழுகிறது என் கண்கள்....இருந்தும்

என் கண்ணீர் துளிகள் கூட
அவளின் மனதை ஈரமாக்க வில்லை...
காரணமும் எனக்கு தெரியவில்லை..

என் நெஞ்சுக்குழிக்குள் நெருப்பாய்
எரிகிறது அவளின் நினைவுகள்...

எல்லாம் தெரிந்தும் தெரியாதது
போல் அவள்...

புரியவில்லை என்றால் புரிய வைக்கலாம்
புரிந்து கொண்டே புண் படுத்தும்
என் மனதை எப்படி புரிய வைப்பேன் அவளுக்கு....

எழுதியவர் : சங்கீதா இந்திரா (3-Mar-14, 8:45 am)
Tanglish : aval oru puthir
பார்வை : 178

மேலே