வாழ்க்கை

கணிக்க முடியா ஓர்
கணிதம்
விவரிக்க முடியா ஓர்
விஞ்ஞானம்
விடையறிய முடியா ஓர்
விடுகதை

அது பங்குச்சந்தை அல்ல
நேற்றைய நிலவரப்படி
இந்நொடியை கணிப்பதற்கு

அது சதுரங்கமும் அல்ல
நடக்கப்போவதை கணித்து
மாற்றி விளையாடுவதற்கு

நிலவரத்தால் நடுங்காமல்
கணிப்பால் கலங்காமல்
வாழ்வை வாழ்வோம் !

எழுதியவர் : வந்தியத்தேவன் (3-Mar-14, 9:29 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 110

மேலே