அம்மா
படிச்சதெல்லாம் நம்ப ஊருல;
தூங்குனதெல்லாம் உன் மடியில;
நான் இல்லாம, உன் பாழா போன வகுறு பசிச்சாலும் நீ தின்னதில்ல;
நான் நேரம் கழிச்சு வந்தாலும் உன் கை மட்டும் சோத்துமேல பட்டதில்ல;
படித்த படிப்புக்கு வேலயோ பட்டணத்துல;
என்ன வேணும்னு கேட்டன் மொத மாசம் சம்பளத்துல;
எது தந்தாலும் சந்தோசமா வாங்கிப்பண்டானு சொன்னயில்ல;.
அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு பாடையில..
உன் கைய புடிச்சு நான் நட பழகுன இடம் கூட மாறவில்ல;
இப்பல்லாம் பொழுதோட நான் வந்தாலும் சோறு போடா தாயே நீயும் இல்ல........