நவீன ரோமியோ 420 காதல் விளம்பரம் -- மணியன்
![](https://eluthu.com/images/loading.gif)
காதலி தேவை
( விளம்பரம் )
======== ======= =======
என் பெயர் : MR. ROMEO 420
வயது : 25
வசதி : நன்று.
நவீன உலக ரவுன்டி எனக்கு உடனடியாக காதலி தேவை. நிபந்தனைகள் மற்றும் சலுகைகள் கீழே தரப்பட்டுள்ளது. விருப்பமானவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வ செய்யப்படாதவர்கள் கவலைப் பட வேண்டாம். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு மீண்டும் தேர்வாக வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
***** ***** *****
நிபந்தனைகள் :-
1) 18 முதல் 21 வயதுடைய பெண்கள். அழகாக
இருப்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்த்தல் உண்டு.
2) மொபைல் போனில் வேகமாக எஸ் எம் எஸ் அனுப்பத்தெரிய வேண்டும்.
3) கடலை போடுவதில் முனைவர் பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை தரப்படும்.
4) புரட்சிப் பெண்ணாக இருக்கக் கூடாது.
5) காதலிக்கும் போது நிபந்தனைகளை தளர்த்தவோ மேலும் அதிகப்படுத்தப் படவோ செய்யலாம்.
6) நான் எடுக்கும் முடிவே இறுதியானது. இதை முதலிலேயே உறுதி செய்தல் அவசியம்.
***** ****** ******
சலுகைகள் :-
1) பிரத்யேக மொபைல் தரப்படும்.தினமும் பத்து ரூபாய் டாப் அப் மற்றும் மாதாந்திர எஸ் எம் எஸ் பேக்கேஜ் செய்து தரப்படும்.
2) வாரம் ஒரு முறை டேட்டிங்கில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
3) எனது திருமணத்திற்கான முதல் அழைப்பிதழ்
தங்களுக்கே வழங்கப்படும்.
4) நீங்கள் அழுது புலம்புபவாக இருந்தால் திருமண.அழைப்பிதழ் தந்த நாள் முதல் தினமும் பத்து கைக்குட்டைகள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
5) என் திருமண முகூர்த்தம் நீங்கள் கண்டு களிக்க ஏதுவாக மணமேடையின் முதல் வரிசையில் உட்கார வைக்கப் படுவீர்கள். முதல் பந்தியிலும் அமர்ந்து விருந்துண்ணலாம். உங்களுக்காக இதற்கென தனியாக கவனிக்க எனது முன்னாள் காதலிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
6) இந்த விளம்பர பிரதியை கத்தரித்துக் கொண்டு வருபர்களுக்கு நேர் காணலில் முன் உரிமை வழங்கப் படும்.
இது சம்பந்தமாக எந்த வித கடிதப் போக்குவரத்தும் சிபாரிசும் பண்ணுவதில் தடை ஏதும் கிடையாது.
நன்றி
இவண் நவீன ரோமியோ 420
===== ***** ===== *****