சாதிக்கொரு சுடுகாடு
எமன்: யுத்த களம் எங்கே?
களத்தில் வீசிய கத்தி எங்கே?
கத்தி ஏந்திய கைகள் எங்கே?
கைகள் சுமந்த அரிவாள் எங்கே?
அரிவாள் தந்த வலிகள் எங்கே?
வலியோடு வழிந்த குருதி எங்கே?
குருதி உலாவிய உடல் எங்கே?
உடல் தாங்கிய உயிர் எங்கே?
நிலத்தில் விதையான பிணம் எங்கே?
பிணத்துக்கு உறவான சொந்தங்கள் எங்கே?
உன் சொந்தங்களை கொன்று செறித்து
நின்று சிரித்த என் சாதி எங்கே?
எங்கே?
நட்பு: கொன்று விட்டு
எரித்துவிட்டேன்.